தர்பூசணியை ஃப்ரீசரில் வைத்தால், பழத்தில் இருக்கும் தண்ணீர் ஃப்ரீஸ் ஆகி ஐஸ்க்ரீம் சாப்பிடுவது போல் இருக்கும்.
நீர் மோரில் கருவேப்பிலையுடன் பொடியாக அரிந்த வெள்ளரித்துண்டு, மாங்காய், ஒன்றிரண்டாகத் தட்டிய இஞ்சி ஆகியவற்றைப் போட்டுப் பருகலாம்.
கரும்புச்சாறு கோடைக்கு ஏற்ற சிறந்த பானம். சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும்.
பெண்கள் வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் "பேக்' போட்டுக் கொள்ளலாம்.
நுங்குகளை வாங்கி உரித்துக் கையால் பிசைந்து சர்க்கரை, பால், ஏலக்காய் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிட இயற்கையான ஐஸ்க்ரீம் ரெடி.
கோடையில் மண்பானை நீரைக் குடிக்கிறீர்களா? அதில் சிறிது துளசி இலைகளைப் போட்டுப் பருகுங்கள். உடலுக்கும் நல்லது. உடல் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
மோர், இளநீர், எலுமிச்சைச் சாறு, பழச்சாறுகள் என்று ஏதாவது ஒன்றை தினமும் அவசியம் பருகுங்கள்.
வெயில் காலத்தில் மிக அதிகாலையில் அல்லது மாலையில் நன்றாக வெயில் தாழ்ந்த பிறகு செடிகளுக்கு நீர்விட வேண்டும். இதனால் நீண்ட நேரம் மண்ணில் ஈரப்பதம் இருக்கும்.
கோடை காலத்தில் வாரத்தில் ஒருநாள் இரவு "ஃப்ரூட் நைட்' என்று வைத்துக் கொள்ளவும். "ஃப்ரூட் சாலட்' சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் சாப்பிட்டால் தெம்பாக இருக்கும். சமையல் செய்யும் வேலையும் மிச்சமாகும்.
மொட்டை மாடியிலும் முன் முற்றத்திலும் தென்னை ஓலையில் கொட்டகை கட்டிவிடுங்கள். இரவில் ஓலையில் நீர் தெளித்துவிட்டால் ஏ.சி.யில் இருப்பது போல இருக்கும்.