உடலில் இரும்பு சத்து குறைவால் உதடுகளில் உலர்ச்சி, வெண்மை அல்லது நிறம் மாற செய்யும் இதை போக்க அதிகளவில் கீரை உண்ண வேண்டும்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சரும ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. அவை குறைந்தால் உதடுகளில் வறட்சி, பிளவு ஏற்படலாம். வால்நட், சால்மன், சீயா விதைகள் போன்றவை இதை போக்க உதவும்.
மெலனின் அளவு அதிகமானால் உதடுகள் கருமையாக மாறிவிடும் இதற்கு நெல்லிக்காய் சாப்பிட்டு வர கருமை நிறம் நீங்கும்
உடலில் நீர் குறைவாகும் போது உதடுகள் வறட்சி அடைகின்றன. இதனால் தண்ணீரை அதிகமா குடிக்க வேண்டும்
உதட்டில் விரிசல், வலி, புண் ஏற்பட்டால் வைட்டமின் B குறைபாடுள்ளது இதற்கு காளான் அதிகமாக சாப்பிட வேண்டும்