சாண்ட்விச்சின் உள்ளே வைக்கும் பொருள்களை முதலிலே தயாரித்து வைத்துக் கொள்ளலாம்.
எப்போது சாண்ட்விச் சாப்பிட விருப்பம் உள்ளதோ அப்போது ரொட்டித் துண்டுகளுடன் தயாரித்து வைத்த மசாலாவை கலந்தால் போதும் நொடிப்பொழுதில் சாண்ட்விச் ரெடி.
உளுந்து வடை செய்யும்போது, ஒரு கைப்பிடி சேமியாவைத் தூள் செய்து, மாவில் சேர்த்து வடைகளைப் பொரித்தால், வடை மொறுமொறுவென்று இருக்கும்.
முருங்கைக்கீரை, அகத்திக் கீரையை வதக்கும்போது கரண்டியின் காம்புப் பகுதியை வைத்துக் கிளறினால், கட்டி விழாமல் கீரை உதிரி உதிரியாக இருக்கும்.
வத்தக் குழம்பு வைக்கும் போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.
மிளகாயை வறுத்து பொடி செய்யும் போது, சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வறுத்தால், கமறாமல் இருப்பதோடு, பொடியும் மணமாக இருக்கும்.
சப்பாத்தி மீந்துவிட்டால், அதை மிக்ஸியில் அரைத்து சர்க்கரை, வறுத்த முந்திரி சேர்த்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.