களிக்கு சர்க்கரை போட்டு செய்தால் மிக நன்றாக இருக்கும். அதில் சிறிது பச்சை கற்பூரம் சேர்த்து விட்டால் மணமும் சுவையும் முதல் தரமாக இருக்கும்.
முட்டைகோஸ் குழம்புக்கு துவரம் பருப்பு சேர்த்து செய்வதற்கு பதிலாக உடைத்த வேர்க்கடலை பருப்பு கலந்து செய்தால் சுவையாக இருக்கும்.
குக்கரில் சாதம் வடிக்கும்போது சாதம் குழையாமல் இருக்க சில நிமிடங்கள் இடைவெளி விட்டு வெயிட் போட வேண்டும். சாதம் பொல பொலவென இருக்கும்.
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும் போது சிறிதளவு கடலைமாவை புளித்த தயிரில் கலந்து சேப்பங்கிழங்குடன் சேர்த்து செய்தால் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.
எந்த சாம்பார் வைத்தாலும் சவ்சவ் காயை சிறு துண்டுகளாக நறுக்கி, வதக்கி சேர்த்தால் சாம்பார் மிகுந்த வாசனையுடன் இருக்கும்.
தோசைக்கு அரைக்கும் போது பச்சரிசியுடன் கூடவே நாலைந்து ஓமவள்ளி இலைகளையும் சேர்த்து அரைத்தால் தோசை வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். ஓமம் நல்ல மருத்துவம் கூட.