இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். மாவு இரண்டு நாட்கள் கெடாமலும் புளிக்காமலும் இருக்கும்.
தோசை கல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையை போட்டு தோசை சுட்டால் முறுமுறுப்பாக வரும்.
வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.
கிழங்குகளை பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊறவைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகிவிடும். அப்படி ஆகாமல் இருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.
பாகற்காயை அப்படியே பச்சையாய் வதக்காமல் நீர் விட்டு வேகவைத்து வடிகட்டி பிறகு வாணலியில் போட்டு வதக்க வேண்டும். கசப்பு இருக்காது. நான்கு ஸ்பூன் எண்ணெய்யிலேயே பாகற்காய் முறுமுறுவென மாறும். எண்ணெய் செலவும் மிச்சம்.
தர்பூசணி பழத்தின் வெள்ளைப் பகுதியை குப்பையில் வீசாமல் சீவி வைத்துக்கொண்டு அரிசியுடன் சேர்த்து அரைத்து தோசை வார்க்கலாம். தோசை சுவையாக இருக்கும். உளுந்தம் பருப்பு தேவையில்லை