பருப்பு வேக வைக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் , பருப்பின் சுவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், குக்கர் விசிலில் இருந்து பருப்பு வெளியே வராது. குக்கரின் மூடியிலும் அழுக்கு படியாது.
இஞ்சி-பூண்டு மற்றும் மிளகாய் பேஸ்ட் செய்யும் போது அல்லது அதை நசுக்கும்போது அதில் சிறிது உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.இதன்மூலம் அரைப்பது எளிதாகி சுவை மற்றும் வாசனை அதிகரிக்கும்
உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும்போது சிறிதளவு சிறுபருப்பு மாவு தூவி எண்ணெய்யில் பொரித்தால் சிப்ஸ் மொருமொருப்பாக சுவையும் கூடுதலாக இருக்கும்.
தயிர் புளிப்பாக இருந்தால் , தயிருடன் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்க்க தயிருடன் இனிப்பு சேர்ந்து தயிரை புளிக்காமல் பாதுகாக்கும்.
தேங்காய் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்ற கலவை சாதங்கள் செய்யும் போது பொறி கடலையை நன்கு வறுத்து போட்டு கிளறினால் மிகவும் சுவையானதாக இருக்கும்.
பூரி சுடும் போது எண்ணெயை உறிஞ்சுவதற்கு, எண்ணெயில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். இதனால் பூரிகள் குறைந்த எண்ணெயை உறிஞ்சி, மிருதுவாக இருக்கும்
காய்கறிகளை வதக்கும்போது, எண்ணெயில் அரை ஸ்பூன் உப்பை போட்டு வதக்கிப் பாருங்கள். அடிபிடிக்காமல் சீக்கிரம் வதங்கும்.