சாம்பாரின் சுவையை அதிகரிக்க கால் கப் பாலுடன் சிறிது கடலை மாவை கரைத்து சேர்க்கவும்.
வெங்காயத்தை தோல் உரிக்கும் முன்பு 10 நிமிடம் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். (அ) பிரீசரில் 15 நிமிடம் வைத்துவிட்டு வெட்டினால் கண் எரிச்சல், கண்ணீர் வராது.
ஆம்லேட் தயார் செய்யும்போது வெங்காயத்தை வதக்கி சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.
ரசம் செய்து இறக்கும்போது தேங்காய் துருவல் சேர்த்தால் ருசி அமோகமாக இருக்கும்.
காய்ந்த தேங்காய் துருவல் ஒரு கப், முந்திரி அரை கப், சோம்பு முக்கால் கப், காய்ந்த மிளகாய், தனியா தலா கால் கப், கறிவேப்பிலை ஒரு கைப்பிடி (வெயிலில் உலர்த்தியது) சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
இந்த பொடியை சைவ, அசைவ குருமா செய்யும் போது 2 டீஸ்பூன் அளவு சேர்த்தால் நல்ல வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
இட்லி மாவில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து புளிக்க வைத்தால் இட்லி மிருதுவாக வரும்.
பீன்ஸ் பொரியல் தயாரிக்கும் போது, பீன்ஸ் வெந்தவுடன் உப்பு சேர்க்க வேண்டும். முதலிலே உப்பை சேர்த்தால் சரியாக வேகாது.
இட்லி மாவில் காய்ந்த மிளகாய் போட்டு வைத்தால் புளிக்காது. அல்லது வெற்றிலையைக் காம்புடன் சேர்த்தாலும் புளிக்காது.
காப்பித்தூளை பிரீசரில் வைத்து பயன்படுத்தினால் நீண்ட நாள் வரை மணம் மாறாமல் இருக்கும்.