சித்த மருத்துவம் - ஆண்களுக்கான குழந்தை பேறு தீர்வுகள்
ஆண்களுக்கான உடலியல் பிரச்சனை
அசூஸ்பெர்மியா (விந்தணுக்கள் இல்லாத நிலை), ஏஸ்பெர்மியா (விந்து நீரே வெளியாகாமல் இருப்பது), ஒலிகோஸ்பெர்மியா (விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவு), அஸ்தினோஸ்பெர்மியா (விந்தணுக்களின் இயக்க குறைபாடு)
டெரடோஸ்பெர்மியா (விந்தணுக்களின் அமைப்பில் ஏற்படும் குறைபாடு), ஹைபோஸ்பெர்மியா (விந்தணுக்களின் அளவு குறைபாடுகள்), நெக்ரோசூஸ்பெர்மியா (விந்து நீரில் உயிருள்ள விந்தணுக்கள் இல்லாத நிலை), தாம்பத்திய குறைபாடுகள் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு.
சித்த மருத்துவம்
சித்த மருத்துவத்தில் குழந்தைப் பேறின்மை நீங்கி கருத்தரிக்க உதவும் சித்த மருத்துவக் குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. இதை சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்துவது நல்லது.
ஆண்களுக்கான குழந்தை பேறு தீர்வுகள்
முருங்கை விதை, வாதுமை விதைகள், நெருஞ்சில் விதை, நீர்முள்ளி விதை, ஆலம் விதை, பூனைக்காலி விதை, முள்ளங்கி விதை போன்றவை விந்தணுக்களை அதிகரிக்கும்.
விறைப்புத்தன்மை குறைபாடுகள் சீராக, நிலப்பனைக் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, அமுக்கரா கிழங்கு, பூமிசர்க்கரைக் கிழங்கு, சாதிக்காய், சாதிபத்திரி, மதனகாமப்பூ, கசகசா, வாலுழுவை மூலிகைகள் நல்ல பலனைத் தரும்.
உடல் பருமன் இருந்தால் அதைக் குறைப்பதற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆண், பெண் இருவரும் தினமும் ஹெகல் பயிற்சி செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
அதிக கலோரி ஆற்றலைத் தரும் இனிப்பு வகைகள், பேக்கரி உணவுகள், நொறுக்குத் தீனிகள் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
மன அழுத்தம், மன உளைச்சல், மனக்கவலை இன்றி ஒருமித்த உணர்வுடன், பிரார்த்தனைகளுடன் கணவன்-மனைவி சேரும்போது, இல்லத்தில் துள்ளி விளையாட பிள்ளைச் செல்வம் பிறக்கும்.