சித்த மருத்துவம்- பெண்களுக்கான குழந்தை பேறு தீர்வுகள்
பெண்களுக்கான உடலியல் பிரச்சனை
சினைப்பை நீர்க்கட்டிகள், கருப்பை தசை கட்டிகள், எண்டோமெட்ரியோசிஸ், அடினோமயோமா, சினைப்பாதை அடைப்புகள், புரோஜஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன், புரோலாக்டின், ஆன்டி முல்லரின் ஹார்மோன் போன்றவைகளின் சீரற்ற செயல்பாடுகள்.
சித்த மருத்துவம்
சித்த மருத்துவத்தில் குழந்தைப் பேறின்மை நீங்கி கருத்தரிக்க உதவும் சித்த மருத்துவக் குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. இதை சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்துவது நல்லது.
பெண்களுக்கு குழந்தை பேறு தீர்வு
மாதவிடாய் காலங்களில் அரசமரத் தளிர் இலைகளை அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கரு உண்டாகும்.
உடல் ரீதியான காரணம் இல்லாமல் மகப்பேறு தாமதமடையும் ஏராளமான பெண்களுக்கு அனுபவ ரீதியாக அரசமரத் தளிர் பலன் தந்துள்ளது.
மாதவிடாய் ஒழுங்காக வருவதற்கு அசோகப்பட்டை, முள்முருக்கு பூ, கருஞ்சீரகம், மரமஞ்சள், சதகுப்பை, சோற்றுக் கற்றாழை போன்ற மூலிகை மருந்துகள் நற்பலனைத் தரும்.
விஸ்ணுகிரந்தி செடியை பொடி செய்து மாதவிலக்கு வந்த முதல் மூன்று நாட்கள் வெந்நீரில் சாப்பிட்டு வர மகப்பேறு உண்டாகும்.
புத்திரச் சீவி விதையை பொடி செய்து காலை, இரவு இருவேளை தேனில் கலந்து சாப்பிட்டால் குழந்தைப்பேறு உண்டாகும்.