ஷ்ரத்தா ஸ்ரீநாத் மலையாளத் திரைப்படமான கோஹினூர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
shraddhasrinath
முன்னணி நடிகையான ஷ்ரத்தா ஸ்ரீநாத் மலையாளம், கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார்.
shraddhasrinath
சமீபத்தில் ஷ்ரத்தா சந்தோஷ் பிரதாப் உடன் இணைந்து ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடித்த ‘தி கேம்' என்ற வெப் தொடர் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
shraddhasrinath
இதுகுறித்து அவர் என்னை பொறுத்தவரை பொறுப்பான இல்லத்தரசி கதாபாத்திரங்களிலேயே ரசிகர்கள் என்னை ரசிக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ, அந்தவகை கதாபாத்திரங்களே என்னை தேடி வருகின்றன.
shraddhasrinath
எனக்கும் காதல், ரொமான்ஸ் படங்களில் நடிக்க ஆசை தான். இன்னும் சொல்லப்போனால் ரகசிய உளவாளி போன்ற கதாபாத்திரங்களில், திரில்லர்-ஆக்ஷன் படங்களில் நடிக்க ரொம்பவே ஆசைப்படுகிறேன்.
shraddhasrinath
நிறைய படங்கள் நடிக்கவேண்டும் என்பது என் இலக்கில்லை. நடிக்கும் படங்கள் குறைவாக இருந்தாலும், அதில் நிறைவாக நடித்து ரசிகர்களை கவரவேண்டும்.
shraddhasrinath
இதுவரை எந்த கிசுகிசுக்களிலும் சிக்காமல் என் வண்டி ஓடுகிறது. விமர்சனம் எழுவதுபோல் நான் நடந்துகொள்ளாததே காரணம் என்று கூறியுள்ளார்.
shraddhasrinath
இதையடுத்து அவ்வப்போது அவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.