ஷியா வெண்ணெய் ஒரு சிறந்த மாய்ச்சுரைசர் ஆகும். குறிப்பாக குளிர்காலங்களில் இது சரும பராமரிப்புக்கு முக்கிய பங்காற்றுகிறது.
ஷியா வெண்ணெயில் நிறைந்துள்ள ஒலிக், ஸ்டீரிக், லினோலிக் அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் A, E, C ஆகியவை, சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்கின்றன.
ஷியா வெண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவது பளபளப்பான சருமத்தை பராமரிக்க உதவுகிறது.
மேலும், அதன் குறிப்பிடத்தக்க மென்மை மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகள் வறண்ட சருமத்தில் விழும் விரிசல்களை குணப்படுத்த உதவுகின்றன.
குறிப்பாக குதிகால் மற்றும் வெட்டுக்காயங்கள் போன்ற பகுதிகளை குணப்படுத்த உதவுகின்றன.
ஷியா வெண்ணெய் முடிக்கு கண்டிஷனராக பயன்படுகிறது. உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடி புத்துயிர் பெற உதவுகிறது.
முடியின் நுனியில் உள்ள கிளைத்த முடிகளை சரிசெய்கிறது. மேலும் முடியின் ஈரப்பதத்தை தக்கவைக்கிறது.
சூரிய கதிர்களின் சேதத்திலிருந்து முடியை பாதுகாக்க ஆப்பிரிக்காவில் பாரம்பரியமாக ஷியா வெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நீச்சல் வீரர்கள் பலரும் ஷியா வெண்ணெயை தலையில் தடவிகொண்டு, பின்தான் தண்ணீரில் இறங்குகின்றனர்.
காரணம், குளோரின் சேதத்திலிருந்து முடியைப் பாதுகாத்து, அதன் ஆரோக்கியத்தையும், உயிர்ச்சக்தியையும் ஷியா வெண்ணெய் பாதுகாக்கும்.