காலையில் படுக்கையில் இருந்து எழும்பும் போதே அழகான சிந்தனையுடன் முக மலர்ச்சியோடு எழுந்திருங்கள்.
படுக்கையில் இருந்தபடியே கை, கால்களை நீட்டி, மடக்கி, இடுப்பை அசைத்து உடலுறுப்புகளுக்கு புத்துணர்ச்சியை ஊட்டுங்கள். இதனால் ரத்த ஓட்டமும், ஜீரண சக்தியும் மேம்படும். முதுகு வலியை தவிர்க்க முடியும்.
ஏதோ 4 பக்கெட் தண்ணீரை தூக்கி ஊற்றினோம். குளித்தோம் என்றில்லாமல் சுடு நீரையும், குளிர்ந்த நீரையும் கலந்து குளியுங்கள். ரத்த ஓட்டம், நிண நீர் ஓட்டம் அதிகரிக்கும். கழிவுகளை வெளியேற்றும்.
குளிக்கும் தண்ணீரில் சில துளி லாவண்டர் எண்ணையை கலந்து குளித்தால் உடல் மற்றும் மனரீதியாக புத்துணர்வு பிறக்கும். எதிர்மறை சிந்தனை வராது.
காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து குடித்து வந்தால் உடலில் தங்கும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு விடும்.
ஏதோ கிடைக்கிறது என்பதற்காக விரும்பிய போதெல்லாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறைந்தது 4 மணி நேர இடைவெளிவிட்டே சாப்பிட வேண்டும். 2 முறை சமைத்த உணவுகளையும், ஒரு முறை சாத்வீத உணவுகளையும் எடுத்து கொள்வது நல்லது.
இரவு விளக்கு வெளிச்சத்தை தவிர்க்க வேண்டும். முழு இருட்டில் தூங்குவது ஹார்மோன் சுரப்பை தூண்டும்.
தூங்க செல்லும் முன்பு 5 நிமிடம் சுவாச பயிற்சி செய்யுங்கள். மெலடோனின் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். கழுத்துக்கு ஏற்ற மிருதுவான தலையணையை பயன்படுத்துங்கள்.