கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் சர்தார் 2. பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
சர்தார் 2 படத்திற்கான சண்டைக் காட்சியை படமாக்கும் போது, நடிகர் கார்த்தி விபத்தில் சிக்கினார். இதனால் காயமுற்ற நடிகர் கார்த்தி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
தற்போது சர்தார் 2 படத்திற்கான டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது.
சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.