குழந்தைகளை ஆரோக்கியமாக்கும் மணல் விளையாட்டு

குழந்தைகளை ஆரோக்கியமாக்கும் மணல் விளையாட்டு

Published on
கடற்கரை மணலில் கால் பதித்து விளையாடும் குழந்தைகளுக்கு மன மகிழ்ச்சி கிடைக்கிறது.
மண்ணில் வீடுகட்டி விளையாடுதல், கோபுரம் கட்டுதல், குச்சியை மறைத்து வைத்து கண்டு பிடித்தல், எலிவளை அமைத்தல்
குகைகள் அமைத்தல் போன்ற பல விளையாட்டுகளை விளையாடுவதால் குழந்தைகளின் உடல் தசைகள் வலிமை பெறுகின்றன.
குழந்தைகள் மணலில் விளையாடுவதால் அவர்களின் மனம் ஆரோக்கியமாக இருக்கிறது. ஒற்றுமை மலர்கிறது. விட்டுக்கொடுக்கும் பழக்கம் வளர்கிறது.
மண்ணில் விளையாடுவது குழந்தைகளின் கற்பனை திறனையும், படைப்பாற்றல் திறனையும் வளர்க்கிறது.
ஈரமணல், உலர்ந்த மணல், நீர் சேர்த்து குழைத்த மணல், களிமண் என பலவித மணல்களில் விளையாடும் போது குழந்தைகளின் பிரித்தறியும் திறன் வளர்கிறது.
பெற்றோர் மணல் விளையாட்டுகள் மூலம் பெற்ற பசுமையான அனுபவங்களை குழந்தைகளுக்கும் கொடுத்திட வேண்டும். குழந்தைகளுக்கு மணல் விளையாட்டுகளின் மகிமையை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
இன்றைக்கு எத்தனையோ விளையாட்டுப் பொருட்கள் உருவெடுத்தாலும் அடிப்படையில் மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வாழ வித்திடுகின்றன.
எனவே பெற்றோரே! குழந்தைகளுக்கு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களை வாங்கி கொடுங்கள். மண் உண்டியலை வாங்கி கொடுத்து சேமிக்க சொல்லிக்கொடுங்கள்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com