சூரிய கதிர்வீச்சுகளின் வீரியம் அதிகமாக இருக்கும் வேளையில் வெளியே நடமாடினால் சருமம் நேரடியாக பாதிப்புக்குள்ளாகும்.
இயற்கை முறையில் சருமத்தை பாதுகாக்க விரும்புபவர்களின் தேர்வாக குங்குமப்பூ அமைந்திருக்கிறது. அது வெப்பத்தை விரட்டியடித்து சருமத்திற்கு பொலிவை தரக்கூடியது.
வெப்பமான மாதங்களில் குங்குமப்பூவை சருமத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
குங்குமப்பூவில் குரோசின், குரோசெடின், சப்ரானால் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன.
அவை சூரியன் உமிழும் புற ஊதாக்கதிர்வீச்சுகள் மற்றும் சுற்றுப்புற மாசுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன.
குங்குமப்பூ அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் ஒவ்வாமை, எரிச்சல், சரும வெடிப்பு போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த உதவும்.
குங்குமப்பூவில் வைட்டமின்கள் A, C, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. அவை சரும வளர்ச்சிக்கு வித்திடக்கூடியவை. இளமை தோற்றத்தை தக்க வைக்கவும் துணை புரியும்.
குங்குமப்பூவில் உள்ள இயற்கையான கரோட்டினாய்டுகள் சரும நிறத்தை மேம்படுத்தக்கூடியவை.