* முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள வேண்டும்.
* ஒரு கப் துருவிய சுரைக்காயுடன் 1 கப் ரவை சேர்க்க பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சியை சேர்க்க வேண்டும்.
* பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, துருவிய தேங்காய் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும் .
* பின் சுரைக்காயுடன் தாளிப்பு மற்றும் புளித்த மோரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
இட்லி தட்டில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள 'சுரைக்காய் இட்லி மாவை' கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சின்ன சின்ன இட்லியாக ஊற்றி 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான சுரைக்காய் இட்லி தயார்.