சுவாச அலர்ஜி, ஆஸ்துமா பிரச்சனை : சித்த மருத்துவத் தீர்வுகள்
துளசி, கற்பூரவள்ளி, ஆடாதோடை இலைச் சாற்றைத் தேனில் காய்ச்சி 5 முதல் 10 மி.லி. வரை எடுத்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காய் லேகியம் எடுத்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் இருமல், சளிப் பிரச்சனையும் நீங்கும்.
நுரையீரலை வலுப்படுத்த தினமும் 10 துளசி இலைகளை சாப்பிடலாம்.
தூதுவளை இலைகளை வைத்து ரசம் செய்து உணவுடன் உண்ண வேண்டும்.
சிற்றரத்தைப் பொடியை தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து உண்ண நுரையீரல் வலுப்படும்.
தாளிபத்திரி சூரணம் 1 கிராம், கஸ்தூரி கருப்பு 100 மி.கி., சிவனார் அமிர்தம் 100 மி.கி.,பலகரை பற்பம் 200 மி.கி. இவைகளை தேன் அல்லது வெந்நீரில் இருவேளை சாப்பிட்டு வர வேண்டும்.
சுவாச குடோரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
ஆடாதோடை நெய் ஐந்து மி.லி. வீதம் இரு வேளை சாப்பிட வேண்டும்.