மூளை செயல்பாட்டை அதிகரிக்கும் ‘பர்பிள்’ உணவுகள்..!
பன்னீர் திராட்சை
பன்னீர் திராட்சை மூளை அலர்ஜி, மூளை வீக்கம் ஆகியவற்றை தடுப்பதோடு மூளை செல்களின் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
கருஊதா நிறத்தில் இருக்கும் பன்னீர் திராட்சையில் பல அற்புதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. சுவையும் மிகுந்தது. இந்த ஊதா நிற திராட்சையில் ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் நிறைந்து இருக்கின்றன.
ஊதா நிற கத்தரிக்காய்
மூளையில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதோடு வீக்கம் உட்பட பல்வேறு பிரச் சினைகள் ஏற்படாமலும் தடுக்கும். அதனால் அடிக்கடி இந்த நீல நிற கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பர்ப்பிள் நிற முட்டைகோஸில் ஆந்தோசயின்கள் மற்றும் பிற சேர்மங்கள் அதிகமாக இருக்கின்றன. இவற்றில் உள்ள ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் மூளை செல்களில் ஏற்படும் அழுத்தம் மற்றும் சேதங்களைக் குறைக்கும்.
கத்தரிக்காயில் பச்சை நிற கத்தரிக்காய், வரி கத்தரிக்காய், நீல நில கத்தரிக்காய் என பல வகைகள் உண்டு. அவற்றில் இந்த நீல நிற கத்தரிக்காயில் ஆந்தோசயின்கள் உள்ளிட்ட ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடெண்ட்டுகள் அதிகமாக இருக்கின்றன.
புளூபெர்ரி மற்றும் பிளாக் பெர்ரி
புளூபெர்ரி மற்றும் பிளாக் பெர்ரி மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அறிவாற்றல் செயல்பாட்டையும் அதிகரிக்கின்றன.
பிளம்ஸ் மற்றும் நாவல்பழம்
வயதாகும்போது ஏற்படுகிற மூளை செல்களின் சேதத்தைத் தடுக்க பிளம்ஸ் மற்றும் நாவல்பழம் உதவுகின்றன.
பிளம்ஸ் மற்றும் நாவல் பழங்களில் நிறைய வைட்டமின்களும், ஆற்றல் வாய்ந்த ஊட்டச்சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன. இவை மூளையின் ஆரோக்கியத்துக்கு தேவையான மிக முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
பர்பிள் முட்டைகோஸ்
பொதுவாகவே பெர்ரி பழங்களில் ஆன்டி ஆக்சிடெண்ட்டுகள் நிறைந்து இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அதிலும் குறிப்பாக பிளாக் மற்றும் புளூபெர்ரி பழங்களில் ஆந்தோசயின் உள்ளிட்ட பல ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடெண்ட்டுகள் இருக்கின்றன.
வழக்கமாக வெளிர் பச்சை நிற முட்டைகோஸ் தான் அதிகமாக சாப்பிடுவோம். இதிலும் நிறைய சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அதை விட பர்பிள் நிற முட்டைகோஸ் எடுத்துக்கொள்வது இன்னும் சிறந்தது.