சாமா அரிசி - 1/4 கப், பால் - 2.1/2 கப், குங்குமப்பூ - சில இழைகள், சர்க்கரை - 1/4 முதல் 1/2 கப், நறுக்கிய பாதாம் மற்றும் முந்திரி - சிறிதளவு, ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
சாமா அரிசியை நன்றாக கழுவி, போதுமான நீரில் சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஒரு கனமான பாத்திரத்தில் பாலை மிதமான சூட்டில் வைத்து சூடாக்கவும். பால் கொதிக்க ஆரம்பித்ததும், ஊறவைத்த அரிசியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
குங்குமப்பூ இழைகள், நறுக்கிய பாதாம், முந்திரி சேர்த்து கிளறவும். அரிசி நன்கு வெந்து, பால் கெட்டியாகும் வரை மிதமான தீயில் அவ்வப்போது கிளறிக்கொண்டே இருக்கவும்.
அரிசி வெந்ததும் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். கீர் சற்று கெட்டியானதும், அடுப்பை அணைத்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பரிமாறவும்.