பூம்பாறை என்பது இந்தியாவில், தமிழ் நாட்டின், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு மலை கிராமமாகும். இது பழனி மலைகளின் இதயம் போன்று அமைந்துள்ளது. பார்ப்பதற்கு அழகா இருக்கும் இக்கிரமம் மனதிற்கு அமைதியை கொடுக்கும்.
கடமக்குடி- கேரளா
கடமக்குடி தீவுகள் கேரளாவில் உள்ள கொச்சி நகரின் ஒரு தீவு புறநகர்ப் பகுதியாகும். கண்களை கவரும் வகையில் இந்த தீவு அமைந்துள்ளது.
கிம்சர்- ராஜஸ்தான்
கிம்சர் என்பது ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமம். இது பாலைவன சாகசங்கள், கோட்டைகள் மற்றும் அரச தங்குமிடங்கள் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. ராஜஸ்தான் பாரம்பரியத்தை அனுபவிக்க இது ஒரு சிறந்த இடமாகும்.
கல்பா இமாச்சலப் பிரதேச
கல்பா என்பது இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கின்னூர் மாவட்டத்தின் மாவட்டத் தலைமையகமான ரெக்காங் பியோவின் மேலே அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். இது ஆப்பிள் பழத்தோட்டங்களுக்கு பெயர் பெற்றது.
சிட்குல் -இமாச்சலப் பிரதேச
இமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் உள்ளது. பனி மூடிய சிகரங்கள், பசுமையான புல்வெளிகள் மற்றும் பாஸ்பா நதி ஆகியவை இதன் முக்கிய ஈர்ப்புகளாகும். இங்கு 500 ஆண்டுகள் பழமையான மதி கோயில் உள்ளது.
தீர்த்தஹள்ளி- கர்நாடக
தீர்த்தஹள்ளி என்பது கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் மற்றும் சட்டமன்றத் தொகுதியாகும். இது துங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது மற்றும் இயற்கை அழகு, புராணக்கதைகள், மலைகள், கோட்டைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு பிரபலமானது.
மவ்லின்னாங்- மேகாலயா
மேகாலயா மாநிலத்தின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மவ்லின்னோங் ஆகும். இங்கு தூய்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மேலும் டிஸ்கவர் இந்தியா பத்திரிகையால் ஆசியாவின் தூய்மையான கிராமமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.