பேரிக்காயில் பொட்டாசியம், பெக்டின் மற்றும் டானின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. மேலும் யூரிக் அமிலத்தை கரைத்து அதன் மூலம் வாத நோய்களை குணப்படுத்துகிறது.
நார்ச்சத்து நிறைந்தது
அனைத்து ஊட்டச்சத்துக்களும் தினமும் நமக்கு குறிப்பிட்ட அளவில் தேவைப்படுகிறது. ஒரு நடுத்தர பேரிக்காயானது ஆறு கிராம் நார்ச்சத்தை கொண்டுள்ளதாகவும், பெண்களின் தினசரி தேவையான நார்ச்சத்து அளவில் 24 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது எனவும் கூறுகிறது. நார்ச்சத்து நமது வயிறை முழுமையாக்குகிறது. பசி எடுப்பதும் குறைகிறது.
குறைந்த கலோரி
உடல் எடையை குறைப்பதற்கு முக்கிய ஆதாரமாக கலோரிகள் உள்ளன. நமது உடலில் கலோரிகளை குறைப்பதன் மூலம் நம்மால் உடல் எடையையும் குறைக்க முடியும். பேரிக்காயானது 100 கிராமுக்கு 56 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது. எனவே உடல் எடையை குறைப்பதில் இது நன்மை பயக்கிறது.
அதிக நீர்ச்சத்து கொண்டது
பேரிக்காய் பழம் அதிகமான அளவில் நீரால் ஆனது. கிட்டத்தட்ட இதில் 84 சதவீதம் நீர் உள்ளது. அதிகமான அளவில் நீர்ச்சத்தை கொண்டிருந்தாலும் கூட இது குறைவான அளவில் கலோரிகளை உள்ளடக்கியது. எனவே எடை இழப்பிற்கு மட்டுமின்றி உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளவும் இது உதவுகிறது.
செரிமானத்திற்கு உதவுகிறது
பேரிக்காய் நமது செரிமான ஆரோக்கியத்திற்கும், மலச்சிக்கலை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இதில் அதிக நீர் உள்ளடக்கம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்திற்கு வித்திடும். ஆரோக்கியமான குடல் மற்றும் நல்ல செரிமான அமைப்பு இவை இரண்டுமே எடை இழப்பிற்கு உதவும் காரணிகளாக உள்ளன.