பப்பாளியில் உள்ள பப்பைன் மற்றும் கைமோபப்பைன் என்ற நொதிகள் புரதங்களை உடைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
பப்பைன் நொதி இயற்கையான எக்ஸ்ஃபோலியண்டாக செயல்படுகிறது. இது இறந்த சரும செல்களை அகற்றி முகத்தில் பருக்களின் அளவு குறையவும், துளைகளை அடைக்கவும், மென்மையான மற்றும் பிரகாசமான நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
முகச்சுருக்கம்
பப்பாளியில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராட உதவி புரிந்து உங்கள் சருமத்தை மென்மையாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவும்.
லைகோபீன் இளமை தோற்றத்தை தக்கவைத்து தோல் சுருக்கத்தை குறைக்கவும் உதவும்.
சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தும்
பப்பாளி சருமத்துளைகளை சுத்தம் செய்து சருமத்தை பிரகாசமாகவும், தெளிவாகவும் மாற்ற உதவுகிறது. சருமத்தின் உள் அடுக்குகளில் ஊடுருவி, அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றுவதன் மூலம் நல்ல நிறத்தையும் கொடுக்கிறது.
தோல் நோய்கள்
பல காலமாக பப்பாளி தழும்புகள், தீக்காயங்கள் மற்றும் பிற தோல் நோய்களுக்கு இயற்கையான மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
பாதிக்கப்பட்ட இடத்தில் பப்பாளிக்கூழை பயன்படுத்தினால் உடனடியாக தோல் அரிப்பு மற்றும் அலர்ஜிக்கு தீர்வு அளிக்கிறது.