சிறுநீரகம் தொடர்பான நோய் வராமல் தடுக்கும்  ஆரஞ்சு பழம்

சிறுநீரகம் தொடர்பான நோய் வராமல் தடுக்கும் ஆரஞ்சு பழம்

Published on
ஆரஞ்சு பழத்தில் ப்ரோட்டீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் C, தையாமின், பொட்டாசியம், வைட்டமின் A, கால்சியம், வைட்டமின் B-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது.
ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உடலில் நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.
ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன. ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் C உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
ஆரஞ்சு பழத்தை அதிக அளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் ஏற்படுவது மிக குறைவு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதற்கு காரணம் அதில் உள்ள சிட்ரிக் ஆசிட் எனும் அமிலமாகும். உடலில் ஏற்படும் அதிகப்படியான கொழுப்பினை கரைத்து வெளியேற்ற பெரிதும் பயன்படுகிறது.
ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்ற ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. மேலும் இதய பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.
ஜீரண சக்த்தியை அதிகப்படுத்தி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றுகிறது.
ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட் உடலில் புற்று நோயை உருவாக்கும் செல்களை அழித்து உடலை பாதுகாத்து புற்று நோய் வராமல் தடுக்கிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவு சாப்பிடும் முன் ஆரஞ்சு பழத்தை ஜூஸாக குடித்து வருவது நல்லது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com