வெங்காயத்தில் கந்தகம் நிறைந்துள்ளது. இது உச்சந்தலையை சுத்தப்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
வெங்காயத்தில் வைட்டமின் சி, பி9, பி6 மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சல், பூஞ்சை வளர்ச்சி மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கிறது.
வெங்காயச் சாறு, கற்றாழை ஹேர் மாஸ்க்
2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை 2 ஸ்பூன் வெங்காய சாறுடன் சேர்த்து, முடி மற்றும் உச்சந்தலையில் தடவி 30-40 நிமிடங்கள் கழித்து தலைமுடியைக் கழுவ வேண்டும். பின்னர் வெங்காயம் சேர்க்கப்பட்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனரை தேர்வு செய்யலாம்.
வெங்காய சாறு, தேன் ஹேர் மாஸ்க்
இந்த ஹேர் மாஸ்க் முடியின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, இயற்கையான கண்டிஷனராக செயல்பட்டு, முடியின் மயிர்க்கால்களை பலப்படுத்துகிறது. இதனால் முடி சேதம் மற்றும் வறட்சியைத் தடுக்க உதவுகிறது.ஒரு தேக்கரண்டி தேனுடன் அரை கப் புதிய வெங்காய சாற்றை சேர்த்து ஹேர் மாஸ்க்கை உருவாக்கலாம்.
இஞ்சி, வெங்காய சாறு ஹேர் மாஸ்க்
இந்த ஹேர் மாஸ்க்கானது அழற்சி எதிர்ப்பு மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது முடி வளர்ச்சிக்கு ஏற்றதாகும். இதற்கு இஞ்சி மற்றும் வெங்காயச் சாற்றை சம அளவு எடுத்து நன்கு கலக்கி தலைமுடிக்குத் தடவி உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்த பின்னர் கழுவ வேண்டும்.