பொதுவாக சிறுவர் மட்டுமே விளையாடும் விளையாட்டு இதுவாகும். கையில் ஒரு நீண்ட கம்பும் (கிட்டிக்கோல்), நடுவிரல் அளவில் நீளம் மற்றும் அகலம் கொண்ட ஒரு சிறிய துண்டு கம்பும் (கிட்டிப்புள்) வேண்டும். அதன் இருபுறமும் கூர்மைப்படுத்தப்பட வேண்டும்.
ஆட்டம் தொடங்கும் போது மண்ணில் விரலை வைத்து கீறியபடி ஒரு குழி அமைத்து, அதில் சிறிய கம்பை மாற்றுத்திசையில் வைத்து, பெரிய கம்பால் குழியில் விட்டு எதிரணியினர் இருக்கும் திசையில் மேலே நோக்கி வீச வேண்டும். அதை மற்ற அணி பிடிக்காத வண்ணம் விளையாட வேண்டும்.
கிளித்தட்டு
வயல்வெளிகளில் விளையும் பயிரைக் கொத்திச் செல்ல வரும் கிளிகளை உழவர்கள் கூட்டமாய் நின்று துரத்தும் வழக்கத்தில் இருந்து இது தோன்றியது. இந்த விளையாட்டை இரு குழுக்களாக விளையாடுவர்.
பம்பரம்
உருளையாக கூம்பு வடிவில் வடிவமைக்கப்பட்ட மரக்கட்டையின் அடிப் பகுதியில் கூர்மையான ஆணியை உள் இறக்கி கயிற்றால் சுற்றி தரையில் சுழற்றிவிட்டு விளையாடுவதே பம்பரமாகும்.
தனியாகவும், குழுவாக சேர்ந்தும் விளையாடலாம்.குழந்தைகளின் மனதை ஒருமுகப்படுத்தவும், கவனத்தை கூர்மைப்படுத்தவும் உதவுகிறது
ஆடு புலி ஆட்டம்
ஆடு புலி ஆட்டம் தமிழர் திண்ணையின் வியூக விளையாட்டு என்று அழைக்கப்படுகிறது. ஆடுகள் என்னும் பெயரில் 15 சிறிய கற்களும், புலி என்னும் பெயரில் 3 பெரிய கற்களும் இடம் பெறுகின்றன.
புலிகள், ஆடுகளைப் பிடிப்பதும், ஆடுகள், புலிகளின் இயக்கத்தை தடுப்பதும் இதன் நோக்கம் ஆகும்.
கோலி
கோலிக்காய்களை குறிப்பார்த்து அடிப்பதே இந்த விளையாட்டின் மையம் ஆகும்.உருண்டையான கண்ணாடி பீங்கானால் ஆன கோலிக் குண்டு மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.
ஒவ்வொரு பகுதி மக்களும் வித்தியாசமான முறைகளில் விளையாடுகின்றனர். இந்த விளையாட்டு குழந்தைகளின் கவனச்சிதறலை தடுக்க உதவி செய்கிறது.
பச்சைக் குதிரை
சிறுவர்களுக்கான இந்த விளையாட்டை இளைஞர்களும் விளையாடுவது உண்டு. பெரும்பாலும் இதை இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில் விளையாடுவர்.