முகம் ஜொலிக்க இனி பார்லர் போக வேண்டாம் ஐஸ் கட்டி இருந்தாலே போதும்..!
ஐஸ் கட்டிகளின் சிறந்த பண்புகளில் ஒன்று அதன் அழற்சி எதிர்ப்பு தன்மை. இது முகப்பருவைக் குறைத்து, குணப்படுத்த உதவுகிறது.
ஐஸ் கட்டிகள் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியையும் கட்டுப்படுத்துகின்றன. இதனால் பருக்கள் குறைகின்றன.
மேக்கப் போடுவதற்கு முன்பு ஐஸ் கட்டியை சருமத்தில் தேய்ப்பது ப்ரைமராக வேலை செய்யும்.
விரிவடைந்த துளைகளை (Open போர்ஸ்) சுருக்கி சருமத்தை இறுக்கமாக்க உதவுகிறது.
ஐஸ்கட்டி இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கன்னங்களுக்கு இயற்கையாகவே ரோஜா நிற தோற்றத்தை அளிக்கிறது.
அதிகப்படியான சூரிய ஒளி, ஒவ்வாமை அல்லது தடிப்புகள் காரணமாக சருமம் எரிச்சல், அரிப்பு அல்லது வீக்கமடைந்தால், ஐஸ் கட்டியைப் பயன்படுத்துவது உதவியாக இருக்கும்.
வறண்ட சருமம் உடையவர்கள் ஐஸ் கியூப்ஸை முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
ஏனெனில் ஏற்கனவே முகம் எண்ணெய்த்தன்மை இல்லாமல் வறண்டிருக்கும். அதில் இன்னும் தண்ணீரை சேர்த்தால் மேலும் பாதிப்படையும்.