புதிய பயணம்… அதே நம்பிக்கையுடன்... கவினின் புதிய பட பூஜை
kavin.0431
நடிகர் கவின் 2006-ல் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை தொடர்கதையின் மூலம் திரையில் அறிமுகமானவர்.
kavin.0431
இதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலில் நாயகனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பின்பு சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்கள் நடித்து வந்தவர் 'நட்புனா என்னானு தெரியுமா' படத்தில் முன்னணி நடிகராக நடித்தார். இருந்த போதிலும் பட வாய்ப்பு சரி வர இல்லை.
2019-ல் பிக் பாஸ் சீசன் 3 யில் பங்கேற்று அதன் மூலமாக பார்வையாளர்களுக்கு பிடித்த ஒருவராக மாறினார்.
2021 ல் இவர் கதாநாயகனாக நடித்த 'லிஃப்ட்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது.
kavin.0431
அதன் பின் டாடா, ஸ்டார், ப்ளடி பெக்கர் என பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
kavin.0431
தற்போது கவினின் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை இன்று துவங்கியுள்ளது.
kavin.0431
கவினின் 9 வது படமான இதில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
kavin.0431
இப்படத்தை கனா காணும் காலங்கள் தொடரை இயக்கிய கென் ராய்சன் இயக்குகிறார்.
kavin.0431
இன்று படப்பிடிப்பு பூஜை துவங்கியுள்ளதை பட குழுவினர் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளனர்.