இந்த 3 உணவுகளை எப்போதும் சூடுபடுத்தி சாப்பிடாதீங்க..
சமைத்த உணவுகளை மீண்டும் சூடேற்றி சாப்பிடுவதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் ஒருசில உணவுகளை சூடேற்றி சாப்பிடக்கூடாது.
அப்படி சாப்பிட்டால், அது நஞ்சாக மாறிவிடும். அவை எந்தெந்த உணவுகள் என்பதைக் காண்போம்.
சாதம்
சமைத்த சாதத்தில் பேசில்லஸ் சிரியஸ் என்னும் பாக்டீரியாவின் ஸ்போர்கள் இருக்கும்.
இப்படி சமைத்த சாதத்தை சரியான முறையில் மூடி, ஃப்ரிட்ஜ்ஜில் வைக்காமல், மீண்டும் சூடுபடுத்தினால், ப்ரைடு ரைஸ் சிண்ட்ரோம் என்னும் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
இந்த பிரச்சனையால் வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வேறு சில செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சமைத்த சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட நினைத்தால், அதை முறையாக மூடி உடனே ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து, தேவையான போது வெளியே எடுத்து, சாதத்தை ஒருமுறை கிளறிவிட்டு, பின் சூடேற்றி சாப்பிட்டால், எவ்வித பிரச்சனையும் இருக்காது.
உருளைக்கிழங்குகள்
வேக வைத்த உருளைக்கிழங்குகளை ஒருபோதும் மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது.
அப்படி வேக வைத்த உருளைக்கிழங்கை மீண்டும் சூடுபடுத்தினால், அது போட்டுலினம் என்னும் நஞ்சை உற்பத்தி செய்து, செரிமான மண்டலத்தையும், தசைகளையும் பாதிக்கும்.
வேக வைத்த உருளைக்கிழங்கை பிறகு பயன்படுத்த விரும்பினால், ஒரு கண்டெய்னரில் போட்டு மூடி, ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பின் தேவையான போது எடுத்து சூடுபடுத்தினால், அது நஞ்சாக மாறாது
பசலைக்கீரை மற்றும் பிற கீரை வகைகள்
பசலைக்கீரை மற்றும் பிற கீரைகளில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன.
இவற்றை சமைத்த பின் மீதும் சூடேற்றும் போது, அதில் உள்ள நைட்ரேட்டுகள் நைட்ரைட்டுகளாக மாறி, பின் நைட்ரோசம்மைன்களாக மாறிவிடும்.
இது புற்றுநோயை உண்டாக்கும். அதே சமயம் பசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
இதை சூடேற்றும் போது, அது ஆக்ஸிஜனேற்றமடைந்துவிடும். எனவே பசலைக்கீரை மற்றும் வேறு எந்த கீரைகளையும் சூடேற்றக்கூடாது.