இயற்கையான முறையில் Facial: எளிதான  அழகு குறிப்புகள் ..!

இயற்கையான முறையில் Facial: எளிதான அழகு குறிப்புகள் ..!

Published on
5-6 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து பின் ஆவிப்பிடித்து ஈரமான துணியால் தேய்த்தால் கரும்புள்ளிகள் எளிதில் நீங்கிவிடும்.
இரவில் தூங்க செல்வதற்கு முன் முகத்தை கழுவி தேங்காய் பாலில் நனைத்த பருத்தி துணியால் துடைக்கவும், காலையில் நீரில் கழுவவும், இது கருப்பு புள்ளிகளை அகற்றும்.
தேங்காய் பால், தேன் மற்றும் இரண்டு சொட்டு பாதாம் எண்ணெயையும் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 10 முதல் 20 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இது சருமட்தை ஈரப்பதமாக்குகிறது.
உடல் வறட்சியை போக்குவதில் எள்ளுக்கு முக்கிய பங்கு உண்டு. 2 ஸ்பூன் எள்ளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் பயத்தமாவு கலந்து முகத்தில் பூசிவர முகச்சுருக்கம் மறைந்துவிடும்.
முகக்கருமை நீங்க சர்க்கரை, கற்றாழை ஜெல், பால் சேர்த்து ஒன்றாக பேஸ்ட் போல் கலக்க வேண்டும். இதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். பின்னர் 10 நிமிடம் கழித்து ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.
தக்காளி,தயிர் இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி சிறிதுநேரம் மசாஜ் செய்து 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவ சருமத்தில் உள்ள தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மின்னும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com