2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள புதிய படம், 'ரெட்ரோ'. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
ரெட்ரோ என்றாலே பழைய காலத்தை கண்முன் மீண்டும் கொண்டுவருவது என்பதே பொருள். அந்த வகையில் 90 காலகட்ட நிகழ்வை மீண்டும் கண்முன்னே கொண்டுவரும் முயற்சியாக 'ரெட்ரோ' படத்தை அட்டகாசமாக எடுத்துள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நந்தன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் அடுத்த படமாக 'டூரிஸ்ட் ஃபேமிலி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார்.
நேற்று இப்படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில், படத்தின் விமர்சனம் சமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார்.
கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். இப்படம் நாளை வெளியாக உள்ளது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.