தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ட்ராமா'. இப்படம் ஒரு மெடிக்கல் கிரைம் திரில்லாராக உருவாகியுள்ளது. இப்படம் நாளை வெளியாகவுள்ளது.
அஸ்திரம்
நடிகர் ஷாம் மற்றும் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அஸ்திரம்." கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.இப்படம் நாளை வெளியாகவுள்ளது.
பேய் கொட்டு
எஸ். லாவன்யா இயக்கி, நடித்து, தயாரித்து, ஒளிப்பதிவு, இசை என 31 திரைக்கலைகளையும் செய்து ஒரு உலக சாதனை படத்தி திரைப்படமாகியிருக்கும் 'பேய் கொட்டு' நாளை வெளியாகவுள்ளது.
என்னை சுடும் பனி
ராம் சேவா கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் , அறிமுக கதாநாயகனான நட்ராஜ் சுந்தர்ராஜ் நடிப்பில் 'எனை சுடும் பனி' திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
ரீ-ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் - பகவதி
2002 ஆம் ஆண்டு நடிகர் விஜய் மற்றும் ரீமா சென் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பகவதி திரைப்படம் நாளை மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது.
பாஸ் (எ) பாஸ்கரன்
எம். ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா மற்றும் சந்தானம் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது 'பாஸ் (எ) பாஸ்கரன்' திரைப்படம். இதில் அமைந்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும், நண்பேண்டா என்ற சொல்லும் மிகவும் டிரென்ட் ஆனது. இத்திரைப்படம் நாளை மீண்டும் ரிலீஸ் ஆகிறது.