ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பால்..! இன்று‘உலக பால் தினம்’
காலை எழுந்தவுடன் காபி,டீயில் தொடங்கி , மதிய உணவில் தயிர், வெப்பத்தைத் தணிக்க மோர், உணவின் சுவையைக் கூட்ட நெய் எனப் பால் பொருள்கள் இல்லாத நாளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.
பல்வேறு சிறப்புகளும் , சத்துக்களும் நிறைந்த பால், ஐநா சபையால் உலக உணவாக அங்கீகரிக்கப்பட்டது.
80 சதவீதம் அளவு தண்ணீர் இருக்கும் பசும்பாலில் புரதம், லாக்டோஸ், தாது உப்புக்கள், வைட்டமின்கள் நிறைந்தது. தாய்பாலுக்கு இணையான ஃபோலிக் அமிலங்களும் தயமின் மற்றும் பொட்டாசியம் உள்ளது.
குழந்தைகளுக்கான நலனில் தாய்ப்பாலுக்கு மாற்றாக பசும்பால் தான் உள்ளது.
தினசரி ஒரு டம்ளர் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு எலும்புத் தேய்மானம் என்னும் பிரச்சனை ஏற்படுவது இல்லை.
ஒரு டம்ளர் பால் பெண்கள் மெனோபாஸ் காலங்களில் சந்திக்கும் ஆஸ்டியோபெராசிஸ் என்னும் எலும்பு மென்மை, தேய்மானம் பிரச்சனை வராமல் தடுக்கும் ஆற்றலை கொண்டது என்கிறார்கள் மருத்துவர்கள்.
பாலின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்தவும் பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி ’உலக பால் தினம்’கொண்டாடப்பட வேண்டுமென ஐ.நா அறிவுறுத்தியது.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் 'உலக பால் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.