வெற்றிலை வயிற்றில் உள்ள வாயுவை வெளியேற்ற உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது. இது நார்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தும்.
வெற்றிலையில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உடனடி ஆற்றலை வழங்குகின்றன. மேலும், கால்சியம், தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய தாதுக்களும் இதில் உள்ளன.
வெற்றிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவுகின்றன. மேலும் இது வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவுகிறது.
வெற்றிலையை சாப்பிட்டால் அதிக பசியைத் தூண்டும். உடல் வெப்பத்தை அதிகரிக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரக்க உதவும்.
நாடி நரம்புகளை உரமாக்க உதவும், சில நேரங்களில், இது தலைவலி மற்றும் விரைவாதத்திற்கும் (Rheumatism) நிவாரணம் அளிக்கும்.
சளி, இருமல், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது
வெற்றிலையுடன் மிளகு சேர்த்து உண்டு வந்தால் அது நார்ச்சத்தாகி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் .
வெற்றிலை சாறுடன் சிறிது பால், நீர் சேர்த்து குடித்து வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும்.