நிலத்தில் 3 முதல் 4 அடி ஆழத்தில் தோண்டி மண் எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் கற்கள், துண்டுகள், ரசாயன கலவைகள் கண்டிப்பாக இருக்கக்கூடாது.
இயற்கையின் பஞ்ச பூத சக்திகளில் மண் ஒன்று ஆகும். இது உடல் ஆரோக்கியத்திற்கும், நோய்களை குணப்படுத்தவும் துணைசெய்யும்.
மண் சூரிய ஒளியில் உள்ள சக்திகளை உடலுக்கு பெறச்செய்கிறது. குளிர்ந்த மண்ணை உடலில் தடவி வெகு நேரம் உலராமல் இருப்பதன் மூலம் உடலின் வெப்பம் தணிந்து உடல் சம் நிலை அடைகிறது.
உடலில் பூசிய மண்ணுடன் நீரையும் சேர்ப்பதால் தேவையான அடர்த்தியும் , உருவமும் எளிதாக கிடைக்கிறது.
உடல் மற்றும் தோல் காயங்களை சரிசெய்வதில் மண்குளியல் சிறந்தபலனை தருகிறது.
உடலிற்கு குளிர்ச்சியூட்ட பயன்படுகிறது.
உடலில் உள்ள விஷத்தன்மையை நீர்க்கச்செய்து, உறிஞ்சி வெளியே எடுத்து விடுகிறது.
பசியின்மை, மனஉளைச்சலினால் ஏற்படும் தலைவலி, அதிக ரத்த அழுத்தம், தோல் நோய்கள் முதலியவற்றிற்கு சிறந்தமுறையில் சிகிச்சை பயன்படுகிறது.
மலச்சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு காந்தி மண்குளியலையே பயன்படுத்தினார்.