வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து- தேங்காய் துருவல், பச்சைமிளகாய், கறிவேப்பிலை வதக்கி, ராகிமாவு மற்றும் உப்பு கலந்து சிறுதீயில் நன்கு வறுத்து கொள்ள வேண்டும்.
பாத்திரத்தில் ஒன்றரை கப் நீரை கொதிக்கவையுங்கள். அதை ராகி மாவு கலவையில் சிறிது சிறிதாக சேர்த்து கிளறுங்கள். பின்பு அப்படியே மூடி வைத்துவிட வேண்டும்.
மாவு ஆறிய பின்பு நன்கு பிசைந்து கொழுக்கட்டைகளாக பிடித்து, இட்லி அடுக்கில் பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.
இது சத்தான மாலை சிற்றூண்டியாக அமையும். தேவைப்பட்டால் இதில் கொஞ்சம் வெள்ளம் சேர்த்து இனிப்பு கொழுக்கட்டையும் செய்யலாம்.