நடுத்தர அளவு மாங்காய் -3 பொடித்த வெல்லம்-1/4 கிலோ துருவிய இஞ்சி-ஒரு டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர்-தலா ஒரு சிட்டிகை கல் உப்பு-ஒரு டீஸ்பூன்
செய்முறை:
மாங்காய்களை கழுவித் துடைத்து, குக்கரில் 10 நிமிடம் வேகவிடவும். பின்னர் தோல், கொட்டை நீக்கி, நன்கு மசித்து, கூழாக்கிக்கொள்ளவும்.
பொடித்த வெல்லத்துடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, கம்பிப் பதம் வந்தவுடன் மாங்காய்க் கூழ், துருவிய இஞ்சி, கல் உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்ததும் கேசரி பவுடர்,ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். ஆறியதும், பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும்.
தேவைப்படும்போது 2 ஸ்பூன் பன்னாவோடு வேண்டிய அளவு குளிர்ந்த நீர் சேர்த்து பருகலாம். ருசியாக இருக்கும், தாகம் தணியும், உடலுக்கு குளுமையும் தரும்.