சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த ராகி இட்லி, தோசை செய்யலாம் வாங்க..!
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது ராகி இட்லி.
சத்து நிறைந்த காலை உணவு .
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி 1 கப், ராகி - 1 கப், உளுந்து 1/2 கப்
ராகியைத் தண்ணீரில் ஊற வைத்தும் அரைக்கலாம். அல்லது தயார் செய்து வைத்திருக்கும் ராகி தூளை (மாவு) தோசை மாவு பதத்தில் நீரில் கலந்து இட்லி மாவில், அரைக்கும் பொழுதே கலந்து கொள்ள வேண்டும்.
இதே மாவை தோசை சுடுவதற்கும் பயன்படுத்தலாம்.
புதினா, தக்காளி, வெங்காய சட்னி போன்ற ஏதாவது ஒன்றைத் தொட்டுக் கொண்டால் சுவை கூடும்.