வெப் ஸ்டோரீஸ்
உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு துவையல்..!
கொள்ளு – 1 கப்
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி,
கருப்பு உளுந்து – 1 தேக்கரண்டி,
தேங்காய்த் துண்டுகள் – 1 கப்,
புளி – 10 கிராம்
காய்ந்த மிளகாய் – 3,
பெருங்காயத்தூள் – 1 தேக்கரண்டி,
உப்பு – தேவைக்கேற்ப,
கடுகு – 2 தேக்கரண்டி,
எண்ணெய் – 2 தேக்கரண்டி
வாணலியில் கொள்ளு சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாயை போட்டு வறுக்கவும்.
வறுத்து வைத்திருக்கும் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அத்துடன் புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும்.
கடைசியாக கறிவேப்பிலையை தாளித்துக் கொட்டி சூடான சாதத்தில் நல்லெண்ணை சேர்த்து சாப்பிட சுவை அமோகமாக இருக்கும்.
உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.

