காளான் மற்றும் கத்தரிக்காயை பிளாஸ்டிக்கவரில் போட்டு பிரிட்ஜில் வைக்கக்கூடாது.
ஏலக்காய், கிராம்பு, மிளகு ஆகியவற்றை ஒரே டப்பாவில் மூடி வைக்கலாம்.
உலர் திராட்சை, பேரீச்சையை வைக்கும் டப்பாக்களில் ஓரிரு கிராம்புகளை போட்டு வைத்தால் கெடாமலிருக்கும்.
மூலிகைகள் மற்றும் மூலிகை கீரைகளை பிளாஸ்டிக் கவரில் கட்டித்தான் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
அரைத்த மிளகாய் தூள் வைத்திருக்கும் டப்பாவின் மையப்பகுதியில் இரண்டு மிளகாய் வற்றல் போட்டு வைக்க தூளின் நிறம் மற்றும் தரம் மாறாது. பெருங்காயத்தையும் போடலாம்.
ஆப்பிளை நறுக்கி சர்க்கரை தண்ணீரில் போட்டு எடுத்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டப்பாவில் கொடுத்து அனுப்பினால் அப்படியே நிறம் மாறாமல் இருக்கும்.
டீ தூள் டப்பாவில் ஆரஞ்சு பழத்தோலை போட்டு வைத்தால் டீ தூளில் ஆரஞ்சு வாசம் வரும். டீயும் ருசியாக இருக்கும்.
பச்சைநிற காய்கறிகளை சமைக்கும் போது தாளிக்கும் எண்ணெய்யில் சிறிது மஞ்சள் தூள் போட்டு வதக்க காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்கும்.