இந்த டிப்ஸ் தெரிஞ்சாலே போதும்..சூப்பரா சமைக்கலாம்..!
கூடையில் வைத்திருக்கும் உருளைக் கிழங்கு முளைவிடாமல் இருக்க கூடவே ஆப்பிள் பழத்தை போட்டு வைக்க வேண்டும்.
குளிர் காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து விட்டால் ஒரு ஸ்பூனை நன்கு சூடாக்கி அப்பாட்டிலினுள் நுழைத்து விட்டால் எண்ணெய் உருகி வழக்கமான நிலைக்கு மாறிவிடும்.
வெங்காயத்தை பிளாஸ்டிக் பையில் போட்டு பிரிட்ஜில் வைத்து மறுநாள் உரித்தால் தோல் எளிதாக உரிந்து வரும். கண்ணில் இருந்து நீரும் வராது.
பிரியாணி செய்யும்போது ஒரு எலுமிச்சம் பழத்தை அதில் பிழிந்தால் பிரியாணியின் அரிசிகள் தனித்தனியே பிரிந்து பிரியாணி பார்க்க அழகாக இருக்கும்.
மேஜை விரிப்பில் தேநீர் கொட்டி விட்டால் உடனே அந்த இடத்தில் சர்க்கரை சிறிது தூவினால் கறை படியாது.
தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து தூவ மணமாக இருக்கும்.