உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காயை தனித்தனியே சிறிதளவு துருவி, அதன் சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இரண்டையும் கலந்து கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையத்தில் தடவ வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்துவர கருவளையம் படிப்படியாக குறையும்.