சோடியம் என்ற வெடிக்கும் தனிமம், நச்சுத்தன்மை கொண்ட குளோரின் என்ற இரண்டு தனிமங்கள் இணையும் போது, அவை இரண்டும் தங்கள் தீவிர தன்மையை இழந்து மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு உப்பை உருவாக்குகின்றன.
அதுவே சோடியம் குளோரைடு எனப்படும் சமையல் உப்பு ஆகும். உடல் இயக்கத்துக்குத் தேவையான தாதுக்களில் ஒன்று சோடியம்.
இருந்தபோதிலும் அதிக சோடியம், சிறுநீரகங்கள் உடலில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் செயலை பாதிக்கும். இதனால் ரத்த நாளங்களில் அதிக தண்ணீர் தேங்கி அவற்றுக்கு அழுத்தம் உண்டாகும்.
உப்பை அதிகமா எடுத்துக்கொண்டால் அளவுக்கதிகமான தண்ணீர் தாகம் உண்டாகும். மேலும் அளவுக்கதிகமான உப்பு, கை, கால், முகத் தசைகளை வீக்கம் அடையச் செய்யும்.
ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால் எதிர்காலத்தில் பக்கவாதம், இதய கோளாறுகள் ஏற்படலாம்.
காய்கறிகள், மீன், இறைச்சி ஆகியவற்றை பதப்படுத்த உப்பு சேர்க்கப்படுகிறது. இது ஒரு கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
உப்பு பல நேர்மறையான பண்புகளை கொண்டதாக இருந்த போதிலும், அதிக அளவில் சேர்க்கப்படும் உப்பு, கோழிகள், நாய்கள், பூனைகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
பெரியவர்களுக்கு உப்பு தினசரி உட்கொள்ளல் அளவு 2,300 மி.கி.க்கும் குறைவாகவும், உயர் ரத்த அழுத்தம் உள்ள நபர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 500 மி.கி. என்ற சிறிய அளவு மட்டுமே தேவைப்படுகிறது. அதிக உப்பு உடலுக்கு ஆபத்தானது.