உடற்பயிற்சி வெறும் வயிற்றில் செய்வது நல்லதா? சாப்பிட்ட பிறகு செய்வது நல்லதா?

உடற்பயிற்சி வெறும் வயிற்றில் செய்வது நல்லதா? சாப்பிட்ட பிறகு செய்வது நல்லதா?

Published on
காலை உணவு சாப்பிடுவதற்கு முன்பு வெறும் வயிற்றில் நடப்பது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தரும். குறிப்பாக உடலில் சேர்ந்திருக்கும் தேவையற்ற கொழுப்பை எரிக்கும் செயல்முறையை அதிகரிக்கச் செய்யும்.
வளர்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்தும். இவை உடல் எடை இழப்புக்கு அவசியமானவை. வெறும் வயிற்றில் நடப்பது மனத்தெளிவை மேம்படுத்தவும் உதவும்.
அன்றைய நாளை நேர்மறையான தொனியில் தொடங்க வழிவகை செய்யும். வளர்சிதை மாற்றத்தில் பிரதிபதிக்கும் இந்த உடல் செயல்பாடு உடல் எடை இழப்பு பயணத்தை விரைவாக்கவும் துணை புரியும்.
சாப்பிட்ட பின்பு நடப்பது நடைப்பயிற்சி செய்வதும் பல்வேறு நன்மைகளை அளிக்கும்.
செரிமான பாதை வழியாக உணவு செல்லும் செயல்முறையை துரிதப்படுத்தி, விரைவாக செரிமானம் நடைபெறுவதற்கு ஊக்குவிக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கவும் உதவிடும்.
சாப்பிட்ட பிறகு நடப்பது கலோரிகளை எரிக்கவும் வழிவகை செய்யும். அதிலும் உடல் எடை குறைவதற்கு அவசியமான கலோரிகளை எரித்து அந்த செயல்முறைக்கு பக்கபலமாக அமைந்திருக்கும்.
இருவிதமான நடைப்பயிற்சிகளுமே உடல் எடை குறைவதற்கு உதவிடும்.எனினும் உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டிருப்பவர்களுக்கு வெறும் வயிற்றில் மேற்கொள்ளப்படும் நடைப்பயிற்சியே சிறந்தது.
செரிமான பிரச்சனை கொண்டவர்கள் சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வது பலனளிக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கும் நடைப்பயிற்சி உதவிடும்.
தினசரி பழக்கவழக்கம், உடல் எடை அளவு, உணவுப்பழக்கம், உடற்பயிற்சி முறை இவற்றை கவனத்தில் கொண்டும், உடற்பயிற்சி-ஊட்டச்சத்து நிபுணர்களிடம் கலந்தாலோசித்தும் உங்களுக்கு பொருத்தமான நடைப்பயிற்சியை தேர்ந்தெடுப்பது நல்லது.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com