பெண்கள் கூந்தலை பராமரிக்க நெல்லிக்காயை பயன்படுத்துவார்கள். அதிலும் முடி உதிராமல் நீளமாக வளர வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கும்.
நெல்லிக்காயில் வைட்டமின் C, ஆன்டி ஆக்சிடென்டுகள், இரும்பு மட்டுமின்றி உச்சந்தலை மற்றும் முடியின் மயிர்க்கால்களுக்கு பலம் சேர்க்கும் பொருட்களும் நிரம்பியுள்ளன.
அடிப்படையில் நெல்லிக்காய் முடியின் வேர்க்கால்களுக்கு புரதம்போல் ஊட்டச்சத்து மதிப்புடன் செயல்பட்டு அதன் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடியது.
பொதுவாக நெல்லிக்காய் முடி உதிர்தலை குறைக்க உதவும். உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.
விரைவில் முடி நரைப்பதை குறைக்கும். நெல்லிக்காயை எண்ணெய்யாக தலைக்கு பயன்படுத்தலாம்.
நெல்லிக்காய் பொடியையும் தலையில் தேய்த்து வரலாம். நெல்லிக்காயை சாறாக பருகியும் வரலாம்.
நெல்லிக்காயை ஏதாவதொரு வகையில் பயன்படுத்தி வந்தால் கடுமையாக முடி உதிர்வது தடுக்கப்படும். தலைமுடி மீண்டும் உயிர்ப்புடன் காட்சியளிக்க உதவும்.
நெல்லிக்காயை பொறுத்தவரை முடி உதிர்வை தடுக்கவும், முடியை வலுவாக்கவும், முடி அடர்த்திக்கும் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது.
உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை இருந்தாலோ, முடி அடர்த்தி குறைந்து மெல்லியதாக இருந்தாலோ நெல்லிக்காய் சிறந்த தீர்வாக அமையும்.