வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், நாள்பட்ட நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் காய்ச்சல் எளிதில் பரவக்கூடும். அதனால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
தடுப்புமுறை
உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். தண்ணீரும் அதிகம் பருக வேண்டும். நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்.
இந்த வைரஸ் பரவுவதை தடுக்க அடிக்கடி கை கழுவுவது அவசியமானது. வெளி இடங்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போதும், சாப்பிடுவதற்கு முன்பும் கண்டிப்பாக சோப்பு அல்லது ஹேண்ட் வாஷ் பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும்.
லேசான காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் 7 நாட்கள் வரை வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க அது உதவும்.
7 நாட்களை தாண்டியும் அறிகுறிகள் கடுமையாக இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும்.