யாருமே சொல்லித்தராத சமையல் குறிப்புகள் சொல்றேன் தெரிஞ்சுக்கோங்க
பிரெட்டை முக்கோண வடிவில் டோஸ்ட் செய்து தாளித்த தயிரை அதன் மேல் ஊற்றினால் பிரெட் தயிர் வடை ரெடி.
தோசை மாவு அரைக்கும்போது கொஞ்சம் ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால், தோசை பளபளவென்று மெல்லியதாக வரும்.
இட்லிக்கு சட்னி தயார் செய்யும்போது புளிக்கு பதில் தோல் சீவிய மாங்காய்த்துண்டை சேர்த்து அரைத்தால் சட்னியின் சுவை பிரமாதமாக இருக்கும்.
ஒரு கரண்டி நெய்யை அடுப்பில் வைத்து காய்ச்சி அதை பஜ்ஜி மாவோடு கலந்து பஜ்ஜி செய்தால், பஜ்ஜி வாசனையாக இருக்கும்.
ஈரமான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக் கலக்கினால் வெள்ளைக்கரு பாத்திரத்தில் ஒட்டி வீணாவதை தவிர்க்கலாம்.
மீன்களை எண்ணெய்யில் பொரிக்கும்போது அதன் வாசனை அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவும். இதை தவிர்க்க மீன்களைப் பொரிக்கும்போது அடுப்பின் அருகில் பெரிய மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொள்ளலாம்.