சரும அழகை அதிகரிக்க ஸ்ட்ராபெர்ரியை பயன்படுத்துவது எப்படி?
பல்வேறு சத்துக்கள் நிறைந்த ஸ்டாபெர்ரி பழங்கள் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பல நன்மைகள் உண்டு.
இதிலிருக்கும் விட்டமின் A, C, K,கால்சியம்,மக்னீசியம் ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி பழம் சருமத்திற்கும் மிகவும் நல்லது.
சருமச் சுருக்கம் :
ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் C மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் சருமச்சுருக்கங்களை வராமல் தடுத்திடும். சருமச் செல்களை புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள உதவிடும்.
ஸ்ட்ராபெர்ரிகளை அரைத்து ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பேஸ் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் ஒரு முறை இப்படிச் செய்தால் சரும சுருக்கங்களை தவிர்த்திடும்.
சருமப் பொலிவு :
ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் C மற்றும் எலாகிக் ஆசிட் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவிடும்.
ஸ்ட்ராபெர்ரியை பாதியாக வெட்டி அதை முகத்தில் ஸ்க்ரப் செய்யலாம் அல்லது ஸ்ட்ராபெர்ரியை கூலாக்கி அவற்றில் பாலைக் கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம்.
உதடுகள் :
உதடுகளை நல்ல நிறமாக எடுத்துக் காட்ட ஸ்ட்ராபெர்ரி உதவிடும். இதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் உதடுகளில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவிடும்.
ஸ்ட்பெர்ரியை பாதியாக கட் செய்து உதட்டில் தேய்த்து வரலாம். ஸ்ட்ராப்பெர்ரி கூலுடன் பெட்ரோலியம் ஜெல்லியுடன் கலந்து லிப் பாம்மாக பயன்படுத்தலாம்.
வெண்மை பற்கள் :
கறை படிந்த பற்களை வெண்மையாக்க ஸ்ட்ராபெர்ரியை பயன்படுத்தலாம்.
ஸ்ட்ராபெர்ரியை அரைத்து டூத் வொயிட்னராக அப்ளை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதிலிருக்கும் விட்டமின் C பற்களை வெண்மையாக்குவதுடன் ஈறுகளை உறுதியாக்கும்.
தேமல் :
சருமத்தில் எங்கேனும் நிறம் மாறுபட்டிருந்தாலோ அல்லது தேமல், மரு போன்றவை வந்திருந்தாலோ இதனை செய்யலாம்.
ஸ்ட்ராபெர்ரி கூலுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவினால் உடனடி பலன் கிடைத்திடும். இதனை வாரம் மூன்று முறை செய்யலாம்.