பசலை கீரை-100 கிராம், சிறிய வெங்காயம்- 20, மைதாமாவு -1 தேக்கரண்டி,வெண்ணெய்-2 தேக்கரண்டி, மிளகுதூள்-1 தேக்கரண்டி, உப்பு -தேவைக்கு
செய்முறை:
பசலைகீரை மற்றும் சிறிய வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
400 மி.லி நீரை கொதிக்க வைத்து, கீரை மற்றும் வெங்காயத்தை இட்டு வேகவைத்து பின் ஆறவைத்து அரைத் தெடுங்கள்.
சிறிய வாணலியில் வெண்ணெய்யை உருக்கி அதில் ஒரு தேக்கரண்டி மைதா மாவையிட்டு 'சாஸ்' பதத்தில் தயார் செய்யுங்கள்.
இதை அரைத்து வைத்துள்ள பசலை கீரை கலவையில் சேருங்கள். அதில் உப்பு, மிளகு தூள் கலந்து தேவையானால் சிறிது நீர் விட்டு சூடாக்கி இறக்கி எடுத்தால் சுவையான சூப் தயார்!