கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்குங்கள்.
வெங்காயம் சிவக்க வதங்கியதும், தக்காளி, உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கி புளித் தண்ணீர் சேருங்கள்.
கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு, வேகவைத்த பருப்பு, அரைத்த பொடி, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள்.
பரிமாறும் கிண்ணங்களில் இட்லிகளைப் போட்டு அதன் மேல் சாம்பாரை ஊற்றி, கொத்தமல்லித்தழை தூவி, துளி நெய் விட்டுப் பரிமாறுங்கள்.