வெஜ் ஆம்லெட் செய்வது எப்படி?

வெஜ் ஆம்லெட் செய்வது எப்படி?

Published on
உங்களுக்கு இந்த சைவ ஆம்லெட் எப்படி செய்யறதுன்னு சொல்றேன். செஞ்சி பார்த்துட்டு உண்மையிலேயே ஆம்லெட் டேஸ்ட்ல இருந்துச்சான்னு சொல்லுங்க...
கடலைப் பருப்பு - 50 கிராம், துவரம் பருப்பு - 50 கிராம், பாசிப்பருப்பு - 50 கிராம், உளுந்து - 50 கிராம், முந்திரி - 50 கிராம், மக்காச்சோளம் - 50 கிராம், முழு கோதுமை - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக்கோங்க.
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், கோதுமை ஆகியவற்றை தனித்தனியா வறுத்து கொரகொரப்பா அரைச்சுக்கோங்க.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு நல்லா கரைச்சுக்கோங்க..
நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு எல்லாத்தையும் கரைச்ச மாவுடன் சேர்த்து ஆம்லெட் மாதிரி தோசைக்கல்லில் ஊத்தி , வேக வைத்து எடுத்தா சுவையான 'சைவ ஆம்லெட்' ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com